பிளிக்ஸ் அணித் தலைவர்!

கோலாபூரில் மார்ச் 25 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறவிருக்கும் i-League இரண்டாம் நிலை போட்டிகளுக்கான சென்னை அணி (இந்தியன் வங்கி) அறிவிக்கப்பட்டுள்ளது. வலைக் காப்பாளர் பிளிக்ஸ் எட்வர்ட் அணித்தலைவராக செயல்படுவார். செய்தி இங்கே.்

சூப்பர் ஸ்டார்களின் ICL அட்டவனை

11 மார்ச் - லாகூர் பாத்ஷாக்கள் - ஹைதராபாத் - 19.00 மணி

5 மார்ச் - ஹைதராபாத் ஹீரோக்கள் - ஹைதராபாத் - 19.00 மணி

17 மார்ச் - கொல்கத்தா புலிகள் - ஹைதராபாத் - 19.00 மணி

20 மார்ச் - தில்லி ஜெயன்டுகள் - ஹைதராபாத் - 19.00 மணி

22 மார்ச் - சண்டிகர் சிங்கங்கள் - சண்டிகர் - 19.00 மணி

23 மார்ச் - மும்பை சேம்ப்புகள் - சண்டிகர் - 13.30 மணி

28 மார்ச் - அகமதாபாத் ராக்கெட்டுகள் - ஹைதராபாத் - 19.00 மணி

2 ஏப்ரல் - அரையிறுதி 1 - ஹைதராபாத் - 19.00 மணி

3 ஏப்ரல் - அரையிறுதி 2 - சண்டிகர் - 19.00 மணி

4 ஏப்ரல் - மூன்றாமிடத்துக்கான போட்டி - சண்டிகர் - 13.30 மணி

4 ஏப்ரல் - இறுதி 1 - சண்டிகர் - 19.00 மணி

6 ஏப்ரல் - இறுதி 2 - தில்லி - 19.00 மணி

7 ஏப்ரல் - இறுதி 3 - தில்லி - 19.00 மணி

இளவழகி உலக சாம்பியன்!

சென்னையைச் சேர்ந்த இளவழகி பிரான்சில் நடந்த உலக கேரம் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார். பாராட்டுகள். மேலும் செய்தி இங்கே!

சூப்பர் மச்சி!

இந்திய விளையாட்டுச் சுழல் வெகு விரைவாக மாறி வருகிறது. இந்திய கிரிக்கெட் லீக், இந்திய பிரீமியர் லீக், பிரீமியர் ஹாக்கி லீக், i-லீக் (கால்பந்து) என்று புதிய பல போட்டிகள் ஆரம்பமாயிருக்கின்றன. இந்தியா விளையாட்டுகளில் பின்தங்கியிருக்கும் நாடே. அந்நிலையை மாற்ற உள்நாட்டுப் போட்டிகள் நன்றாக வேரூன்றவேண்டும். அதற்கு மாநிலங்கள், நகரங்கள் இடையே போட்டி மனப்பான்மை பெருகவேண்டும்.

அந்த வகையில் சென்னை மற்றும் தமிழக அணிகளை ஊக்குவிக்க இந்த வலைப்பதிவு ஆரம்பிக்கப் படுகிறது. ஒரு வலைப்பதிவு எப்படி அதற்கு உதவமுடியுமென்று எனக்கே தெரியாதுதான். பார்க்கலாம்!